நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நாளை மதியம் 3:00 மணிக்கு காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதில் எண்ணெய் நிறுவன முகவர்கள், நிறுவன மேலாளர்கள் பங்கேற்க உள்ளனர். காஸ் சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவிக்கலாம். கூட்டத்தில் பொதுமக்கள் நுகர்வோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement