தேனி மாவட்ட புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

தேனி: ஆந்திர மாநிலம் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் பி.சினேஹாப்ரியா 32, நேற்று காலை தேனி புதிய எஸ்.பி.,யாகபொறுப்பு ஏற்றார்.
எம்.பி.பி.எஸ்., பொது மருத்துவம் முடித்த இவர் 2017 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியாவார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர் ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். இவர் மதுரை 6வது பட்டாலியன் கமாண்டர், சென்னைஉணவு கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி.,யாவும், மதுரை துணை கமிஷனர், சென்னை தீவிரவாதிகள் தடுப்பு சிறப்புப்பிரிவு எஸ்.பி., சென்னைஅண்ணாநகர் துணை கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்தார்.
தற்போது தேனி மாவட்டத்தின் 2வது பெண் எஸ்.பி.,யாகவும்,மாவட்டத்தின் 17வது எஸ்.பி.,யாக பதவி ஏற்றுள்ளார். சென்னையில் பணிபுரிந்த போது சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 3விசாரணை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு திறன்பட விசாரணை நடத்தி, மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இவரின் கணவர் பிரவீன் குமார் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக உள்ளார்.
மேலும்
-
ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை
-
பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை
-
ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040
-
ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்