விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., மரணம்

துமகூரு: கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துமகூரு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் கிரிஷ், 57. இம்மாதம் 19ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அலுவலகம் முன், சாலையை கடக்க முயற்சித்த பசு மீது மோதினார்.

வாகனம் கீழே விழுந்தது. அவரும் கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

துமகூரு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement