மருத்துவ கல்லுாரி காலியிடம் நிரப்பாவிட்டால் நடவடிக்கை
சென்னை : தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை, தேசிய மருத்துவ ஆணைய குழு சமீபத்தில் மேற்கொண்டது. அதில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் தனித்தனியே விளக்க கடிதங்களை அளித்திருந்தனர்.
அதன்படி, 25 மருத்துவ கல்லுாரிகளுக்கு நிபந்தனை அனுமதி அளிக்கப்பட்டது.
அதேநேரம், 11 மருத்துவ கல்லுாரிகளில் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்கள் இல்லாததால், தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலரிடமும், மருத்துவ கல்வி இயக்குநரிடமும், தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.
அவர்கள் இருவரும், பேராசிரியர்களை நியமிப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து, 11 கல்லுாரிகளுக்கும் நிபந்தனை அனுமதியை, தேசிய மருத்துவ ஆணையம் அளித்தது.
அதில், நான்கு மாதங்கள் மட்டுமே குறைபாடுகளை களைவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், 'மீண்டும் ஆய்வு நடத்தப்படும். அப்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநர் தேரணிராஜன், மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்களுக்கு விடுமுறை அளிக்கும்போது, 75 சதவீத வருகைப் பதிவை உறுதி செய்ய வேண்டும்.
'மாநிலம் முழுதும் உள்ள, அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளின் வருகைப் பதிவு விபரங்களை அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி