கந்துாரி உரூஸ் பண்டிகை கொடியேற்றம்

பண்ருட்டி : பண்ருட்டி ஹஜரத் நுார் முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகை நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பண்ருட்டி காந்திரோடு ஹஜரத் நுார் முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகையொட்டி நேற்று பேண்டு வாத்தியங்கள் முழங்க கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

இன்று (22ம் தேதி) மவுலுாத் ஷரிப் ஒதி சீரணி வழங்குதல், நாளை 23ம் தேதி மாலை அவுலியாவின் ரவுலா ஷரீப் பீடத்தை பூ போர்வையால் அலங்காரித்து இரவு 12:00 மணிக்கு சந்தனகலசம் கூண்டிலேற்றப்பட்டு சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது.

24ம் தேதி மாலை மின்விளக்கு அலங்காரம் செய்தல், 25ம் தேதி தர்காவில் குர்ஆன் ஷரீப் ஒதி ஹத்தம் செய்து ஹதியா செய்தல், 28ம் தேதி மாலை கொடியிறக்கம் நடக்கிறது.

Advertisement