மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு

7


மதுரை: போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, தனது விசாரணை அறிக்கையை ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 22) அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏழு நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.


* பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கிய 7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு போதுமானதல்ல. கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.


* விசாரணையில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Advertisement