குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை: குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்., மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்க்ட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழக அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பதவி.
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?
ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.
டிஎன்பிஸ்பி ஆர்வலர்களின் குரலாக அதிமுக ஒலிக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும்
-
ஒரு தலைக்காதலால் கத்தி முனையில் மாணவியை மிரட்டிய வாலிபர்: தர்ம அடி கொடுத்த மக்கள்
-
கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி; பயணத்திட்டம் இதோ!
-
மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
-
டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்தது!
-
வீதிகளை சுத்தம் செய்யும் 88 வயதான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி!
-
தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடம்