துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு

விழுப்புரம் : வளவனுார் அருகே துாங்கிய பெண்ணிடம் இருந்து 7 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் மனைவி திவ்யா, 32; இவர், நேற்று முன்தினம் தனது மகனுடன் வளவனுார் அடுத்த வடவாம்பலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

இரவு, மகன் மற்றும் தந்தை, தாய் ஆகியோருடன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து துாங்கினார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டில் நுழைந்த நபர் திவ்யா கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த திவ்யா, செயினை பிடித்தபடி கூச்சலிட்டார்.

இருப்பினும், மர்ம நபர் 7 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement