காமராஜர் பிறந்த நாள்

கடலுார் : கடலுார் துறைமுகம் துாய தாவீது மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக பள் ளி முன்னாள் மாணவரான ரோட்டரி கிளப் ஆலோசகர் ஜனார்த்தனன், பாலசுந்தரம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். பள்ளி தாளாளர் சாமுவேல் வாழ்த்திப் பேசினார்.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பாபு ராஜன் தாஸ் செய்திருந்தார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Advertisement