பைக் திருடிய 3 பேர் கைது

திட்டக்குடி : திட்டக்குடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த அருகேரி, நடுத்தெருவைச் சேர் ந்தவர் வைரமுத்து, 35; இவர், கடந்த 19ம் தேதி, தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் 20ம் தேதி எழுந்து பார்த்த போது பைக் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் தலைமையிலான போலீசார் தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே பைக்கில் சந்தேகும்படி வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலுார், பழைய காலனி கோவிந்தராஜ்,25; திருமலை அகரம் வீராசாமி மகன் வினோத்குமார்,19; வேலப்பன் மகன் ரஞ்சித்குமார்,19; என்பதும், அருகேரியைச் சேர்ந்த வைரமுத்து பைக்கை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். உடன், 3 பேரையும் போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு