புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி

விழுப்புரம்: புத்த மதம் மற்றும் சமண மதத்தினர் புனித பயணத்திற்கு, அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர், இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்களுக்காக, தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 120 பேருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம்.

மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை வரும் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை, என்ற முகவரிக்கு அனுப் பிட வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement