பி.பி.எல்., கிரிக்கெட் நேற்றைய போட்டி ஊசுடு அக்கார்ட் வாரியர் அணி வெற்றி

வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் நேற்று நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர் அணி வெற்றி பெற்றது.

பாண்டிச்சேரி பிரிமியர் லீக் 2ஆவது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 27 ம் தேதி வரை பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று மதியம் நடந்த 27வது லீக் போட்டியில் ஊசுடுஅக்கார்ட் வாரியர் அணி- காரைக்கால் நைட்ஸ் அணிகள் விளையாடியது.

முதலில் விளையாடி ஊசுடு காரைக்கால் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக வாசிப் அகடம் 24 ரன்கள் எடுத்தார். ஊசுடு அக்கார்ட் வாரியர் அணி சார்பில் சதக்சிங் மற்றும் சாயி சரண் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்த ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் சைலேஷ் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த அணியின் சிதக் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஊசுடு அக்கார்ட் வாரியர் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி பெற்று 5வது இடத்தில் உள்ளது. காரைக்கால் அணி 9 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு நுழைய முடியாமல் வெளியேறியது. மாலையில் நடந்த போட்டியில் ஜெனித் ஏனம் அணியும்- ஒயிட் டவுண் லெஜன்ட் அணியும் விளையாடின.

Advertisement