குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் ": விழுப்புரத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 603 மனுக்கள் பெறப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 603 மனுக்களை பெற்றார். துறை சார்ந்த அலுவலர்களிடம், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, சப் கலெக்டர் முகுந்தன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement