தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செஞ்சி : செஞ்சியில் தி.மு.க., இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

நகர இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் பேரூராட்சி சேர்மன் மொத்தியார் அலி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திக் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் யமுனா சாதனைகளை விளக்கி பேசினார்.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , நகர நிர்வாகிகள் செயல்மணி, ஜான்பாஷா, சங்கர், மாணிக்கம், சுமித்ரா சங்கர், சங்கீதா சுந்தரமூர்த்தி, சையத் சர்தார், சேகர், ரசூல், தொண்டரணி பாஷா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., உறுப்பினர் வி ஷ்ணு அக்கட்சியில் இருந்து விலகி மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். வார்டு செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Advertisement