28 நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: எம்.எல்.ஏ., தகவல்

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதியில் 28 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்' என அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
விக்கிரவாண்டி தொகுதி யில் 33 அரசு நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளாக (ஸ்மார்ட் கிளாஸ்) தரம் உயர்த்தி தர வேண்டி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தேன்.
அதன் பேரில் தொகுதியில் உள்ள 28 அரசு நடுநிலைப் பள்ளிகளில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றி அமைத்திட 48.51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 28 பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ளது.
மேலும், தொகுதியில் விக்கிரவாண்டி மகளிர் உயர்நிலைப்பள்ளி, மேல்காரணை, கஞ்சனுார் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பரிசீலனையில் உள்ளது. விரைவில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்