மனு தாக்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவிக்காக மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் வி.சாத்தனுார் உட்பட 51 ஊராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவிக்கான மனுவை நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கலைவாணியிடம் மனு தாக்கல் செய்தனர். மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement