சங்காலயா மோட்டார்ஸ் புதிய கார் அறிமுக விழா

விழுப்புரம், : விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு, சங்காலயா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மகே ந்திரா எக்ஸ்.யூ.வி-3 எக்ஸ்.ஓ.,ரெவாக்ஸ் புதிய கார் அறிமுக வி ழா நடந்தது.

விழாவில், சங்காலயா மோட்டாஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் புதிய கார் குறித்து விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'எக்ஸ்.யூ.வி., 3 எக்ஸ்.ஓ., ரெவாக்ஸ் மாடல் 2 இன்ஜினில் கொடுக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 8.94 லட்சம் முதல் 12.94 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

இதில் பேனரோமிக் சன் ரூப், லெதரேட் பிளாக் சீட்ஸ், பிளாக் அலாய் வீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது' என்றார்.

ரவிச்சந்திரன் வரவேற்றார். இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் தமிழ்மணி சுப்ரமணியன், சுந்தரம் பைனான்ஸ் மேலாளர் ஞானவேல், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் சிவமணி, சோழ மண்டலம் பைனான்ஸ் உதவி மேலாளர் செந்தில்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் புதிய காரை அறிமுகம் செய்தார்.

சங்காலயா மோட்டார்ஸ் முதன்மை செயலாக்க அதிகாரி கார்த்திக், பொது மேலாளர் ராஜேந்திரன், விழுப்புரம் பொது மேலாளர் சசிக்குமார், உதவி பொது மேலாளர் வசந்த், வாடிக்கையாளர்கள் ராம்குமார், சிவசூரியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள் செய்திருந்தனர். கோபிநாத் நன்றி கூறினார்.

Advertisement