அரசு பள்ளியில் திருக்குறள் விழா

கடலுார் : பண்ருட்டி அடுத்த திருவாமூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது.

தலைமை ஆசிரியை சிவகாமு தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன.

ஆசிரியர்கள் ரவி, சுரேஷ் போட்டியை நடத்தினர்.

சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள்பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார்.

தமிழ் ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

Advertisement