வீதிகளை சுத்தம் செய்யும் 88 வயதான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி!

3


புதுடில்லி: சண்டிகரில் விடியற்காலையில் 88 வயதான ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி இந்தர்ஜித் சிங் சித்து தெருக்களை சுத்தம் செய்து வருகிறார். இவரை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

கடந்த 1964ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான இந்தர்ஜித் சிங் சித்து, தெருக்களில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் பணியை காலை 6 மணிக்குத் தொடங்குகிறார். சண்டிகரில் வசிக்கும் சித்து தனது தெருவில் குப்பைகளை எடுத்து ஒரு வண்டியில் ஏற்றும் வீடியோ, இணையத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று உள்ளது.


சமூக வலைதளத்தில், பல்வேறு தரப்பினர் சித்துவின் அர்ப்பணிப்பைப் பாராட்டினர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


வெளிப்படையாக, தினமும் காலை 6 மணிக்கு, சண்டிகரின் செக்டார் 49 தெருக்களில், 88 வயதான இந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சுத்தம் செய்து சேவை செய்து வருகிறார். தூய்மையான நகரங்கள் பட்டியலில், சண்டிகர் நிலைமை குறித்து சித்து வருத்தம் அடைந்துள்ளார்.


ஆனால் புகார் செய்வதற்குப் பதிலாக களத்தில் இறங்கி சேவை செய்ய முடிவு செய்துள்ளார். சேவை செய்வதற்கு வயது தடை இல்லை. இந்த போர்வீரனுக்கு ஒரு சல்யூட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement