கடலுாரில் 25ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு
கடலுார் : கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜூலை மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8:00 மணிக்கு கூட்டரங்கில் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement