மங்கலம்பேட்டை பெண்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் க ண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மங்க லம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் மாணவிகளுக்கு, தி.மு.க., சுற்றுச் சூழல் அணி மற்றும் எம்.கே.எஸ்., லேண்ட் புரொமோட்டார்ஸ் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் காளமேகம் வரவேற்றார். சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவரும், எம்.கே.எஸ்., லேண்ட் புரொமோட்டார்ஸ் உரிமையாளருமான சுரேஷ் மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கி, 'பெண் கல்வி அவசியம். கல்வியுடன் பொது அறிவு, அறிவியல் போன்ற அனைத்து துறைகளையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவிகளும் அதிக மதிப்பெண்ணுடன் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்' என்று பேசினார்.

உதவி தலைமை ஆசிரியர் மாலா, ஆசிரியர் உமா மகேஸ்வரி, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுரேஷ், வழக்கறிஞர் வடிவேல் உடனிருந்தனர்.

Advertisement