செய்திகள் சில வரிகளில்.... திண்டுக்கல்

* மலரஞ்சலி

திண்டுக்கல்: மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி கணேசன், ஆகியோரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். செயலர் தண்பாணி, சிவாஜி அறக்கட்டளை தலைவர் நடராஜன் ஆகியோர் தலைவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

* நினைவு தினம் அனுசரிப்பு

திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காமராசர் குறித்து பேசிய தி.மு.க., திருச்சி சிவாவிற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய மன்ற தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி சுசிலா ராணி வரவேறறார். பா.ஜ., நகர் வடக்கு மண்டல பொதுச்செயலர் ரமேஷ்பாஸ்கர் பேசினார். நவரத்தினம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வைரவேல் செய்தார்.





புகையிலை தடை விழிப்புணர்வு

வடமதுரை : உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வடமதுரை வட்டாரத்தில் அனைத்து கல்வி நிலையங்களை சுற்றிலும் புகையிலை இல்லா கல்வி நிலையம் என உறுதி செய்யும் வகையில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என மஞ்சள் நிறத்தில் சுகாதார துறை சார்பில் ரோட்டில் கோடுகள் வரையப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நாகேந்திரன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், ஆய்வாளர்கள் யூசுப் கான், தங்கராஜ் இப்பணியை செய்தனர்.



மாணவியருக்கு பாராட்டு

வடமதுரை : ஓசூரில் ஷியாம் ஆர்ட், கிராப்ட் அகாடமியின் நடத்திய போட்டியில் வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவிகள் ஜோதிபாலா, அபிலாஷினி, பிரித்திகா, நித்யா பங்கேற்றனர். தொல் காப்பியத்தின் 1612 நுாற்பாக்களை தொல்காப்பியரின் உருவ படமாக 38 மணி நேரத்தில் எழுதினர். இவர்களுக்கு 8 வது குழு உலக சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.கே.பெருமாள், இயக்குனர்கள் அருள்மணி, ஹரிஸ்செந்தில், தலைமை ஆசிரியர் ராமு பாராட்டினர்.



மாணவர்களுக்கு பஸ் சேவை

திண்டுக்கல் : அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களுக்காக திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட பஸ் சேவையை கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். உதவி கலெக்டர் வினோதினி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி கலந்துக்கொண்டனர்.



ரேஷன்கடை திறப்பு

திண்டுக்கல் : என்.ஜி.ஓ.காலனி மகாலட்சுமி நகரில் பகுதி நேர ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்துவைத்தார்.அப்போது அவர், உங்களுடன் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுவின் மீது 45 நாளில் தீர்வுகாண அரசு இயந்திரத்தை முதல்வர் முடுக்கிவிட்டுள்ளார் என்றார்.



இலவச மருத்துவ முகாம்

நெய்க்காரப்பட்டி : அய்யம்பாளையம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனைகள் நடைபெற்றன. மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. டாக்டர்கள் சங்கீதா, அரசு, செல்வராஜ் கலந்து கொண்டனர்.

Advertisement