மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் மகனுக்கு 14 நாள் கோர்ட் காவல்

ராய்ப்பூர்:மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகலை இன்று சிறப்பு கோர்ட், 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பூபேஷ் பாகலின் வீட்டில் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரூ.1,000 கோடிக்கும் அதிகமான ஊழலில் சைதன்யாவுக்கு தொடர்பு உள்ளது என்றும், அவரது ரியல் எஸ்டேட் திட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.16.7 கோடியைப் பயன்படுத்தினார் என்றும் புகார் எழுந்தநிலையில் அதை தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி சைதன்யாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இன்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததால், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டமாருதர் சவுகான் முன்பு கோர்ட்டில் சைதன்யா ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் சவுரப் குமார் பாண்டே கூறியதாவது:
சைதன்யாவை காவலில் எடுத்தப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒப்புக்கொண்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டன. மேலும் விசாரணைக்கு அதிக நேரம் இல்லாதநிலையில், மேலும் கோர்ட் காவல் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை மனு அளித்த நிலையில், அதனை விசாரித்த சிறப்பு கோர்ட், சைதன்யாவைஆக.,4 ஆம் தேதி வரை 14 நாள் கோர்ட் காவல் அளித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.தேவைப்பட்டால், கோர்ட் அனுமதியுடன் சைதன்யாவை விசாரணைக்கு உட்படுத்தலாம்.
இவ்வாறு சவுரப் குமார் பாண்டே கூறினார்.