பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி
ராமநாதபுரம்; பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு ஜூலை 25ல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த கல்வியாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 93.90 சதவீதம் தேர்ச்சி விகிதம் எடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கியிருந்தது.
கணிதம் தேர்வில் அதிகமான மாணவர்களின் மதிப்பெண் குறைந்து காணப்பட்டது. 860 க்கும் மேற்பட்டோர் கணிதத்தில் தோல்வி அடைந்தனர். அதை சரி செய்யும் வகையில் கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு கணித பாடம் எடுக்கும் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜூலை 25ல் சிறப்பு பயிற்சி நடத்தப்படவுள்ளது.இதில் கல்வித்துறை இணை இயக்குனர் பயிற்சி அளிக்கவுள்ளார்.
மேலும்
-
பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு
-
முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு
-
வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி
-
பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா!