ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

புதுடில்லி: ''துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை ஆதரித்து வந்தார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னால் யார், என்ன இருக்கிறது என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை தலைகீழாக எழுத முயற்சிக்கிறது. நேரு எழுதிய புத்தகத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், இந்தியாவுக்கும் வெவ்வேறு வரலாறு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி