பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு

சிவகங்கை: சிவகங்கையில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதி வாடகை வீட்டில் வசித்து வருபவர் தியாகு (50). இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருகிறார்.
மாதம் இருமுறை காரைக்குடிக்கு வருவது வாடிக்கை. அதற்காக குடும்பத்துடன் வந்தால் தங்குவதற்கு, வீடு வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தியாகு போலீசாரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தியாகு சென்னையிலிருந்து தற்போது காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார்.
அவர் வந்த பின்பு தான் வேறு ஏதேனும் பொருள்கள் திருடுபோய் உள்ளதா? என்று தெரியவரும். காரைக்குடி வடக்கு போலீசார் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி