முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

33


சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் உடல்நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு,

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
ரொம்ப நல்லா இருக்காங்க. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன்னாடி, அவர் உயிராக மதித்த சகோதரர் முத்து மரணம். ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தார். சாப்பிடாமல் இருந்தார்.



மறுநாள் ஒன்றரை கிலோ மீட்டர் முதல்வர் நடந்து முடித்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்பொழுது பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நேற்றும், நேற்று முன்தினமும் பரிசோதனைகள் முடித்து இருக்கிறார்கள்.


https://www.youtube.com/embed/YEoNoX9-OGw

இன்னைக்கு மருத்துவமனையில் ரிப்போர்ட் கொடுப்பார்கள். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement