இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடில்லி: இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டு உள்ள தடை ஆக.23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளின் முக்கிய கட்டமாக பாகிஸ்தான் விமானங்கள் தமது வான்வெளியில் நுழைய இந்தியா தடை விதித்து இருந்தது. ஏப்.30 முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது.
இந் நிலையில் இந்த தடையை ஆக.23ம் தேதி நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் வெளியிட்டு உள்ளார்.
அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;
பாக்.விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைய தடை செய்யும் விமானப்படை வீரர்களுக்கான அறிவிப்பு ஆக.23ம் தேதி வரை அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி