மாநில குத்துச்சண்டை போட்டி; வென்ற மாணவிக்கு பாராட்டு

முதுகுளத்துார்; முதுகுளத்துார் மாணவி நித்திலா மாநில குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சென்னையில் 2024 -25ம் கல்வியாண்டில் சர்வதேச தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முதுகுளத்துாரை சேர்ந்த மாணவி நித்திலா டைகர் பாக்சிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாணவி நித்திலாவுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவியை குத்துச்சண்டை பயிற்சியாளர் பாஸ்கரன் உட்பட பொதுமக்கள் பலர் வாழ்த்தினர்.

Advertisement