ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு நிச்சயம் பதில் அளிப்போம்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

“ மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் நிச்சயம் பதில் அளிக்கும்,” என, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திட்டவட்டமாக தெரிவித் துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, 10 மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் மாநில கவர்னர் ரவி நிலுவையில் போட்டு வைத்திருந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
காலக்கெடு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வு, மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது கவர்னர் மற்றும் ஜ னாதிபதி ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து தீர்ப்பளி த்தார்.
இது நாடு முழுதும் விவாதத்தை ஏற்படுத்தியது.
'ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு நீதிமன்றம் எப்படி காலக்கெடு விதிக்கலாம்' என்பது உட்பட, இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம், 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார்.
இதை தனி வழக்காக, அரசியல் சாசன அமர்வு வாயிலாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.சந்துருகர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
வழக்கு, இந்த அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தை ஆகஸ்ட் மாத மத்தியில் விசாரிக்கலாம் என இருக்கிறோம்.
'அதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க விரும்புகிறோம்.
'எனவே, அனைத்து மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கேள்வி எழுப்பினார் மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்திற்கு உதவும்படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும், சொலிசிட்டர் ஜெனரலையும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஜனாதிபதி விளக்கம் கேட்ட விவகாரத்தை இவ்வாறு விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “தமிழக கவர்னருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதி கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும், ஏப்ரல் 8ல் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே பதில் அளிக்கப்பட்டு விட்டது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இது தமிழகம், கேரளா சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அனைத்து மாநிலங் களும் தொடர்புடைய விவகாரம்.
''அதனால் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாட்டையும் நாங்கள் கருத்தில் வைக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி எழுப்பிய, 14 கேள்விகளுக்கு நிச்சயம் இந்த நீதிமன்றம் பதில் அளிக்கும்,” எனக்கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.
- டில்லி சிறப்பு நிருபர் -












மேலும்
-
மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது
-
அரசு பஸ் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு