வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி

தர்மபுரி: தர்மபுரியில் அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தர்மபுரி அருகே உழவன் கொட்டாய் பகுதியில் அரசு பவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டில் இருந்த 4 வயது சிறுமி ஹர்த்திகா மற்றும் பஸ் டிரைவர் இருவர் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement