மனு வாங்கி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு உதயகுமார் சாடல்

வாடிப்பட்டி : 'தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களிடம் மனு வாங்கியது. ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் மனுக்கள் வாங்கி மக்களை ஏமாற்றும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
வாடிப்பட்டி அருகே கட்டகுளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழாவில்
அவர் பேசியதாவது: 520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தீர்களே அது என்னாச்சு என முதல்வர் ஸ்டாலினை மக்கள் கேட்கிறார்கள்.100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக தருகிறோம் என்று சொன்னீர்களே. தற்போது 20 அல்லது 5 நாட்கள் தான் தருகிறார்கள்.
தமிழகத்தில் தினமும் 150 கோடி மது பாட்டில் விற்பனையாகின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் 5400 கோடி வரி கட்டாமல் எடுக்கிற பணம் எங்கே போகிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு செந்தில்பாலாஜி தியாகியாக தெரிகிறார். மக்கள் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடந்து வருகிறது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களிடம் பெட்டி வைத்து மனு வாங்கியது, தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மனு வாங்கி மக்களை ஏமாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.
மேலும்
-
மோசடியில் இது புதுசு: போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது
-
அரசு பஸ் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு