சிறுதானிய இயந்திரம் மானியத்தில் பெறலாம்

மதுரை : தமிழகத்தில் சிறுதானிய இயக்கம் 2023 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதில் சிறுதானியங்களை முதன்மைப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க வங்கிகள் மூலம் ரூ.18.75 லட்சம் பின்னேற்பு மானியத்துடன் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில் தானியங்கள், விதைகளில் கற்களை அகற்றுதல், உமிநீக்குதல், தானியம் பிரித்தல், பேக்கிங், தோல் உரிக்கும், பாலீஷ் செய்தல், சீல் வைக்கும், எடைபோடுதல் என இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

கலெக்டர் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்குப் பின் கடன் விடுவிக்கப்படுகிறது. நாவினிப்பட்டி விக்னேஷ்வரன் கூறுகையில், ''எம்.பி.ஏ., படித்து வெளிநாட்டில் பணியாற்றினேன். கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பி சொந்த தொழில் துவங்கினேன். கலெக்டரின் குழு ஆய்வு செய்து கடன் கிடைக்க உதவினர். தற்போது 4 பேர் என்னிடம் பணிபுரிகின்றனர். மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது' என்றார்.

Advertisement