உலகின் டாப் 10 பட்டியலில் மும்பை விமான நிலையம்: தொடர்ந்து 3ம் ஆண்டாக சாதனை

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 3வது ஆண்டாக உலகின் டாப் 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்த தரவரிசை, டிராவல் அண்ட் லெஷ்யூர் நடத்திய உலகளாவிய பயணிகள் கருத்து சேகரிப்பின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கட்டுமானத்தின் வடிவமைப்பு, மறக்கமுடியாத உணவு மற்றும் சிறப்பான பயண அனுபவங்களின் அடிப்படையில் பயணிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் 84.23 புள்ளிகளுடன், இந்த ஆண்டும் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையமாக மும்பை சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது. இந்த விமான நிலையம், தரவரிசைப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
பட்டியலில் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 98.7 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இந்த ஆண்டும் தரவரிசையில் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தின.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம்,
ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையம், டோக்கியோவின் ஹனிடா விமான நிலையம் மற்றும் தென் கொரியாவில் உள்ள இன்ச்சோன் சர்வதேச விமான நிலையம் ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
@block_B@உலகின் சிறந்த விமான நிலையங்கள் 'டாப் 10' பட்டியல்
1.இஸ்தான்புல், துருக்கி
2.சாங்கி, சிங்கப்பூர்
3.தோகா, கத்தார்
4.அபுதாபி, யுஏஇ
5.துபாய், யுஏஇ
6.ஹாங்காங்
7.ஹெல்சிங்கி, பின்லாந்து
8.டோக்கியோ, ஜப்பான்
9.மும்பை, இந்தியா
10.இன்ச்சோன், தென்கொரியாblock_B
பயணிகளுக்கான சிறப்பான வசதிகள் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவத்தை தரும் விமான நிலையங்கள் பற்றிய டிராவல் அண்ட் லெஷ்யூர் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.