தனியார் நிறுவனம் வாயிலாக அரசு பணிக்கு தேர்வா: பன்னீர்
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
வீடு மனை, வாங்குவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அமைக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், 2022ல், ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 'வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையங்கள் போன்றவற்றில் உள்ள பணியிடங்களும், டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்பப்படும்' என அறிவிக்கப்பட்டது.
அதற்கு மாறாக, தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமத்தில் உதவியாளர், தரவு உள்ளீட்டாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு, மனித வள நிறுவனங்களை, தேர்வு செய்து வருவதாக, தகவல்கள் வருகின்றன. இது கடும் கண்டனத்துக்கு உரியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில், அதில் வெற்றி பெறும் இளைஞர்களை வைத்து, அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி
-
சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை
-
மதுரையில் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது எப்படி
-
மணல் திருட்டை தடுக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம்மாதிரி நுாலகமாக மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்