கொ.ப.செ.,வாக மாறிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்

மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வைத்து, ஆட்சிப் பணி செய்யாமல், அரசு செலவில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தி, அவர்களையும் கட்சிப் பணி செய்ய வைப்பது சரியல்ல; அதை எதிர்க்கிறேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலர்களாக செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? பொறுப்பான அதிகாரிகளாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

'ஓரணியில் தமிழகம்' என்பது தேவையில்லாத வேலை. இந்தியாவில் எல்லா மாநிலங்களை போல தமிழகமும், ஓர் அணியில் தான் இருக்கிறது. இது வெற்று வார்த்தை ஜாலம்; மக்களை ஏமாற்றும் வேலை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. என்னை பொருத்தவரை, தி.மு.க., இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது. குர் - ஆன், பகவத் கீதை, பைபிள் போன்றவற்றை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement