6 மாதங்களில் 26,770 பேர்; சாலை விபத்துகளில் உயிரிழந்த பரிதாபம்!

புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இது குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில்; கடந்த 2024ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்துகளில் 54,609 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) இருந்து மே மாதம் வரையில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுவியுள்ளது. டெல்லி-மீரட் விரைவுச்சாலை, டிரான்ஸ்-ஹரியானா, கிழக்கு புற விரைவுச்சாலை, டெல்லி - மும்பை விரைவுச்சாலை போன்ற தேசிய விரைவுச்சாலைகளில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.எஸ்., அமைப்பானது, நெடுஞ்சாலைப் பகுதிகளில் ஏற்படும் சம்பவங்களை விரைவாகக் கண்டறிவதற்கும், நெடுஞ்சாலைகளை திறம்படக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும்
-
புது மாப்பிள்ளை சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
-
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
-
அரசில் 7,000 காலி பணியிடங்களை நிரப்புவது எப்போது: தேர்தல் நெருங்குவதால் பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
-
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
-
புகார் பெட்டி...
-
பி.பி.எல்., கிரிக்கெட் பிளே ஆப் சுற்றில் மோகித் கிங்ஸ் அணி முதலிடம்