புது மாப்பிள்ளை சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

பாகூர்: கரையாம்புத்துார் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட, புது மாப்பிள்ளை சடலத்துடன், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நெட்டப்பாக்கம் அடுத்த பனையடிகுப்பம் வையாபுரி நகரை சேர்ந்தவர் ராஜகுரு, 34. இவருக்கு கடந்த ௪ மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை பார்த்ததாக, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு, 27, என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
கடந்த, 19ம் தேதி நள்ளிரவு ராஜகுரு, தினேஷ்பாபு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, அவரது கூட்டாளிகள் சர்மா, 24, முகிலன், 20, சுமித், 20, அச்சுதன், 24, ஆகியோர் ராஜகுருவை இரும்பு சேர், உருட்டு கட்டையால் தாக்கி, பனையடிக்குப்பம் சாலையில் உள்ள மீன்குட்டை அருகே வீசி சென்றனர்.
கரையாம்புத்துார் போலீசார், ராஜகுருவை மீட்டு, ஜிப்மருக்கு அனுப்பி, கொலை முயற்சி வழக்கு பதிந்து, தினேஷ்பாபு உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி ராஜகுரு நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ராஜகுருவின் சடலத்தை சாலையில் வைத்து, அவரது உறவினர்கள் பனையடிக்குப்பத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், கரையாம்புத்துார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ராஜகுருவின் கொலைக்கு காரணமான, கணவன் - மனைவி மற்றும் உறவினர் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும்' என்றனர்.இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், கரையாம்புத்துார் - நெட்டப்பாக்கம் சாலையில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி