கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

அரியாங்குப்பம்: சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி சார்பில், இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, பரிசளிப்பு விழா நடந்தது.

சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. புதுச்சேரி, தமிழக பகுதியைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், முத்திரையர்பாளையம் எம்.சி.சி., அணி முதல் இடத்தையும், பெரியக்காட்டுப்பாளையம் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், பெருங்களூரு ஏ.சி.சி.பி., அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் பரிசாக, 20 ஆயிரம், இரண்டாம் பரிசு 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம், நான்காம் பரிசாக 5 ஆயிரம், ஐந்தாம் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மனோ, நேஷனல் ஆங்கிலப்பள்ளி தாளாளர் கிரண்குமார், சிவசக்தி முருகன், மதலப்பட்டு பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் மாறன் ஆகியோர் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

Advertisement