வரலாறு படைத்தார் ஷ்ரேயாசி * ஆசிய ரோலர் ஸ்கேட்டிங்கில் தங்கம்

ஜெசியான்: ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் ஷ்ரேயாசி.
தென் கொரியாவில் 20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதல் நாளில் சீனியர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல் கிளாசிக்' ஸ்லலோம் பிரிவில் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஷ்ரேயாசி ஜோஷி களமிறங்கினார்.
தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை கோப்பை வென்றதால், இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கேற்ப சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாசி, அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து, 83.33 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார். இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என புதிய வரலாறு படைத்தார்.
மகாராஷ்டிராவின் புனேயை சேர்ந்தவர் ஷ்ரேயாசி 21. 3 வயதில் ஸ்கேட்டிங் விளையாடத் துவங்கினார். இவரது சகோதரி ஸ்வராலியும் தேசிய சாம்பியன்ஷிப்பில் 9 முறை சாம்பியனாகி உள்ளார்.
தனுஷ் 'வெள்ளி'
ஆண்களுக்கான சீனியர் 200 மீ., டியூவல் டைம் டிரையல் பிரிவில் இந்தியாவின் தனுஷ் பாபு, 17.592 புள்ளி எடுத்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ஆர்யன் பால் சிங் (17.731) 5வது இடம் பிடித்தார்.
மேலும்
-
தமிழகத்தின் 6 மாவட்டஙகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
-
மன உளைச்சலால் பதவி விலக முடிவு: திருச்சி டி.எஸ்.பி., பரபரப்பு கடிதம்
-
தமிழகத்தில் உயர்கிறது தக்காளி விலை
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
பிரிட்டன் ஒப்பந்தத்தால் தொழில் துறை... உற்சாகம்! கோவை, திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்கும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்