மாணவியருக்கு 'டார்ச்சர்' ஆசிரியருக்கு 'போக்சோ'
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணன், 50. இவர், அப்பகுதி அரசு பள்ளியில் பயிலும் மூன்று மாணவியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியர் பயிலும் பள்ளிக்கு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்துாரி, வட்டார கல்வி அலுவலர் நேற்று சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவியருக்கு அவர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.
இதையடுத்து ஆசிரியர் பாலகிருஷ்ணனை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.
ஆசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''2020ல், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களை, விதிமுறைகளை மீறி நியமித்ததாக, கல்வித்துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதன் விளைவாகவே ஆசிரியர்களின் துாண்டுதலின் படி, என் மீது புகார் அளித்துள்ளனர். அவற்றை சட்டப்படி எதிர்கொள்வேன்,'' என்றார்.