சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; மத்திய அரசு

புதுடில்லி: சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைது முறைகேட்டில் தொடர்புடைய 9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்ய சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி பதிலளித்ததாவது; சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைதுகள் தொடர்புடைய 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 ஐ.எம்.இ.ஐ., (IMEI) எண்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைத்து சமாளிக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சைபர் குற்ற புகார் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சைபர் குற்றங்களை புகாரளிக்க இந்த போர்டலை பயன்படுத்தலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்படும். உருவாக்கப்பட்டது.
சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். I4சி மற்றும் புகார் போர்டல் மூலம், குற்றங்களை விரைவாக கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும், எனக் கூறினார்.






மேலும்
-
முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு
-
ரூ.15 லட்சத்துக்கு குழந்தைகள் விற்பனை: பெண் இடைத்தரகர் கைது, வெளிவராத பின்னணி தகவல்கள்
-
எனது தவறு தான்…: எதைச் சொல்கிறார் ராகுல்
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
-
பார்லியில் ஜூலை 28, 29ல் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம்
-
ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தங்கக்காசுகள், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்