அறிவியல் துளிகள்

01. பூமியிலிருந்து 403 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது WASP-132 எனும் இளஞ்சிவப்பு நட்சத்திரம். சமீபத்தில் விஞ்ஞானிகள் இதை சுற்றி வரும் இரண்டு கோள்களை கண்டறிந்து உள்ளனர். அவற்றில் ஒரு கோளான WASP-132 c நட்சத்திரத்தை சுற்ற, 24 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மற்றொன்றான WASP-132 d ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
Latest Tamil News
02. மனிதர்கள் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரும், ஆக்சிஜனும் அவசியம். இவற்றை நிலவில் உள்ள துாசுகளில் இருந்து, சூரிய ஆற்றலைக் கொண்டு உற்பத்தி செய்யும் வழிமுறையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Latest Tamil News
03. சீனாவில் உள்ள ஜாங்சான் தேசிய பூங்காவில், புதிய வகை தேள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, 'மெகாஸ்கிஜோமஸ் ஜாங்சானென்சிஸ்' என பெயரிட்டுள்ளனர். இது, 7.21 - 7.24 மி.மீட்டர் நீளம் கொண்டது.
Latest Tamil News
04. 'ஷார்க் பே பேண்டிகூட்' என்பது எலி போன்ற ஒரு சிறிய விலங்கு. இது, ஆஸ்திரேலியாவில் 150 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆஸ்திரேலிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்த கேமராவில், இந்த விலங்கு குடும்பத்துடன் நடந்து செல்வது பதிவாகி உள்ளது.
Latest Tamil News
05. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சிலந்தி, பாம்பு, தேள் ஆகியவற்றின் விஷத்தை செயற்கை நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்தனர். அவற்றில், பாக்டீரியாக்களை கொல்லக்கூடிய 386 சேர்மங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

Advertisement