குறுமைய வாலிபால் மாணவர்கள் அபாரம்
திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய மாணவர்களுக்கான வாலிபால் போட்டி, திருமுருகன் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் பள்ளி அணி, விகாஸ் வித்யாலயா பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இன்பென்ட் ஜீசஸ் பள்ளி அணி, அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி அணியை வென்றது.
தெற்கு குறுமைய வாலிபால் போட்டி அலகுமலை வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 15 அணிகள் பங்கேற்றன. வேலவன் பள்ளி அணி மற்றும் எம்.என்.எம்.சி., மெட்ரிக் பள்ளி அணிகள் முதல் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டாவது அரையிறுதிக்கு, சுபாஷ் மெட்ரிக் மற்றும் வித்ய விகாசினி பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மேலும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 15 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், பிரன்ட்லைன் பள்ளி அணி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரண்டாவது அரையிறுதிக்கு, சுபாஷ் மெட்ரிக் மற்றும் வித்ய விகாசினி பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன.19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு வித்ய விகாசினி - பிரன்ட்லைன் பள்ளி அணிகள் தகுதி பெற்றன.