பழனியப்பா பள்ளியில் மாடல் ஐக்கிய நாடுகள் மாநாடு

திருப்பூர்; பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் மாடல் ஐக்கிய நாடுகள் மாநாடு நடந்தது.

திருப்பூர் பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியத்துடன் இணைந்து மாணவர் மாடல் ஐக்கிய நாடுகள் மாநாடு நடந்தது. சர்வதேச அவையின் செயல்முறைகள், கலந்துரையாடல் திறன்கள் மற்றும் தலைமையமைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது நடந்தது. சேலம் மற்றும் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக லிட்டில் கிங்டம் பள்ளி முதல்வரும், திருப்பூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு தலைவருமான ரேணு, பி.வி.பி., பள்ளிகள் குழுமத்தின் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பள்ளியின் திட்ட கல்வி இயக்குநர் சதீஷ்குமார், பள்ளி நிர்வாக இயக்குநர் பிரகாஷ், அறக்கட்டளை உறுப்பினர்கள் அபிநயா பிரகாஷ், நிவேதா சதீஷ்குமார், பள்ளி முதல்வர் வித்தியசங்கர், மழலையர் பள்ளி நிர்வாக முதல்வர் யசோதை மனோகர், ஆலோசகர் உமாமகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement