ஈரோடு புத்தகத்திருவிழா: முன்னேற்பாடு பணி ஆய்வு

ஈரோடு, ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், ஆக., 1 முதல், 12 வரை ஈரோடு புத்தகத்திருவிழா நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஏற்பாடுகளை விளக்கினார். 230 புத்தக அரங்கு
கள் அமைக்கப்பட்டு, வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்தும் பதிப்பாளர்கள் வருகை புரிகின்றனர். தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை கண்காட்சி நடக்க உள்ளது. மாலை நேர அரங்கில் சொற்பொழிவு, அறிஞர்களின் கருத்துரைகள் நடக்க உள்ளது. வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், முன்னேற்பாடு பணிகள், அவசர கால வெளியேற்று பாதைகளை அமைக்க யோசனை தெரிவித்தார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்பது குறித்து கேட்டறிந்தார். மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement