ஒரே மாதத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.1,640 உயர்வு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 18ல் ஒரு கிராம் தங்கம், 9,025 ரூபாய், ஒரு பவுன், 72,200 ரூபாய்க்கு விற்பனையானது. படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிராம், 9,190 ரூபாய், ஒரு பவுன், 73,520 ரூபாய் என உயர்ந்து விற்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் கிராமுக்கு, 165 ரூபாய், பவுனுக்கு, 1,320 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேநேரம் கடந்த, 1ல் ஒரு கிராம்-8,985 ரூபாய், ஒரு பவுன், 71,880 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்தில் பவுனுக்கு, 1,640 ரூபாய் உயர்ந்துள்ளது

Advertisement