89 மதுபாட்டில் பறிமுதல் இரண்டு பேருக்கு காப்பு

ஈரோடு, ஈரோடு வில்லரசம்பட்டி டாஸ்மாக் கடை அருகே, கடை மூடிய நேரத்தில், 7,840 ரூபாய் மதிப்புள்ள, 56 மதுபான பாட்டில்களை விற்க நின்றிருந்த, சேலம் காடையாம்பட்டி கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்தையன் மகன் பாஸ்கர், 27, என்பவரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இதே போல் நாராயணவலசு டாஸ்மாக் கடை அருகே, 4,780 ரூபாய் மதிப்பிலான, 33 மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த, சேலம் மாவட்டம், ஓமலுார் ராமிரெட்டிபட்டியை சேர்ந்த முருகேசன், 46, என்பவர் மீது, ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement