தாம்பரம் - பெங்களூரு இடையே 3 'ஏசி' அரசு பஸ் சேவை துவக்கம்

காஞ்சிபுரம்:தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பெங்களூருக்கு செல்லும், மூன்று 'ஏசி' பேருந்து சேவையை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் துவக்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பெங்களூருக்கு சென்று வரும் வகையில், மூன்று 'ஏசி' அரசு பேருந்து சேவை துவக்க விழா காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
இப்பேருந்துகளில் பயணியரின் வசதிக்காக மொபைல்போன் சார்ஜர், பயணியர் பாதுகாப்பு மற்றும் நடத்துநர் வசதிக்ககாவும் தனித்தனியாக, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள், பயணியர் இறங்கும் இடத்தை நடத்துநர் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இப்பேருந்தில் உள்ளது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேலாளர் வணிகம் ஸ்ரீதர், உதவி மேலாளர் தொழில்நுட்பம் தட்சணாமூர்த்தி, காஞ்சிபுரம் பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை
-
பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை
-
ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040
-
ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்
-
கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!