பழவேற்காடில் ஜாலியாக வலம் வரும் வர்ணநாரைகள்

பழவேற்காடு:பழவேற்காடு ஏரிப்பகுதியில், வர்ணநாரைகள் கூட்டம் கூட்டமாக ஜாலியாக வலம் வருவதை கண்டு சுற்றுலாப்பயணியர் குதுகலிக்கின்றனர்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயப்பகுதியில் பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா, கடல்பொந்தா என, 151வகையான பறவைகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பறவைகள், இனப்பெருக்கத்திற்காக, நவம்பர் - மார்ச் மாதங்களில் பழவேற்காடு சரணலாயத்தில் குவிந்திருக்கும்.

தற்போது பறவைகள் சீசன் முடிந்தும், வர்ணநாரைகள் பழவேற்காடு ஏரி மற்றும் இறங்குதளம் பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை ஏரியில் இருக்கும் மீன்களை தன் நீண்ட அலகுகளால் லாவகமாக பிடித்து உண்ணுகின்றன.

மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்கள், மீன்வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சுற்றுலாப்பயணியர், இவை ஏரி நீரில் ஜாலியாக வலம் வருவதை கண்டு குதுாகலிக்கின்றனர்.

Advertisement